டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு உயர்வு

கடந்த ஐந்து ஆண்டுகளில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 8-ந் தேதி நடைபெறுகிறது. இதில், புதுடெல்லி தொகுதியில், முதலமைச்சரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 3-வது முறையாக போட்டியிடுகிறார். இதற்காக, அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அதனுடன் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில், சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், மொத்த சொத்து மதிப்பு 3 கோடியே 40 லட்சம் ரூபாய் என்று கூறியுள்ளார். இது, 2015-ம் ஆண்டு தேர்தலில் இருந்ததை விட, 1 கோடியே 30 லட்சம் ரூபாய் அதிகம். அதேபோல், ரொக்கப்பணம் 7 லட்சத்து 69 ஆயிரத்து 736 ரூபாய் அதிகரித்துள்ளது. அவரது அசையா சொத்துக்களின் மதிப்பு, 85 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது. காசியாபாத், குருகிராம் ஆகிய இடங்களில் அவருக்கு அசையா சொத்துகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version