டெல்லி நட்சத்திர விடுதியில் அமர்ந்து கொண்டு விவசாயிகள் மீது குற்றம் சுமத்தக் கூடாது – நீதிபதிகள்

டெல்லியில் நட்சத்திர விடுதியில் அமர்ந்து கொண்டு விவசாயிகள் மீது குற்றம் சுமத்தக் கூடாது என்று காற்று மாசு தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தக் கோரிய வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தையும் சரி செய்துவிடாது என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

தொலைக்காட்சி விவாதங்கள் காற்று மாசை இன்னும் அதிகப்படுத்துகின்றன என்று சாடிய தலைமை நீதிபதி, காற்று மாசை குறைப்பதற்கான வழிமுறைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். குறைந்தது ஒரு வாரத்திற்கு பயிர் கழிவுகளை எரிக்க வேண்டாம் என விவசாயிகளிடம் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும், அதற்காக, விவசாயிகளுக்கு அபராதம் போன்ற தண்டனை கொடுக்க விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

டெல்லி நட்சத்திர விடுதியில் அமர்ந்து கொண்டு விவசாயிகள் மீது குற்றம் சுமத்தக் கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது, காற்று மாசை கட்டுப்படுத்த அண்டை மாநிலங்களிலும், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும், வாகனங்களை இயக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என டெல்லி அரசு வலியுறுத்தியது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Exit mobile version