வடகிழக்கு டெல்லியில் கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் குவிப்பு

வடகிழக்கு டெல்லியில் இயல்பு நிலை திரும்பி வருவதால், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று 10 மணி நேரம் 144 தடை உத்தரவு தளர்த்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 38 பேர் பலியான நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், வடகிழக்கு டெல்லியின் கோகுல்புரி, யமுனா விகார், பஜன்புரா உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது.

கடந்த 36 மணி நேரத்தில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடைபெறாததால், வடகிழக்கு டெல்லியில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று 10 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version