வரி வசூல் போதுமானதாக இல்லாததால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை தாமதம் -மத்திய நிதியமைச்சர்

ஜி.எஸ்.டி இழப்பீடு வரி வசூல் போதுமானதாக இல்லாததால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை தாமதமாகி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தமிழகத்திற்கு மட்டும் 7 ஆயிரத்து 214 கோடி ரூபாய் இருப்பதாகவும், அதனால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவை கூட்டத்தொடர் உரையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள இழப்பீடு தொகை இரண்டு தவணையாக வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில் ஜி.எஸ்.டி இழப்பீடு வரி வசூல் போதுமானதாக இல்லாததால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை தாமதமாகி வருவதாக நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை வழங்குவதில் மாநில அரசுகளுக்கு பாகுபாடு காட்ட வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை எனவும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version