உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதம் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் திப்ருகார் அடுத்த போகிபீலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வடகிழக்கு மாநிலங்களை புறக்கணித்ததாக குற்றம்சாட்டினார்.
தேசத்தின் வளர்ச்சிக்காக போகிபீல் பாலம் கட்டும் திட்டத்தை உருவாக்கியதாக சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, 2004 ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அதை கிடப்பில் போட்டதாக சுட்டிக் காட்டினார். இதனிடையே பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தேசத்தின் வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களும் வேகமெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.