பதிலடி தாக்குதலால் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் எல்லைப் பகுதியை பார்வையிட பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை ஜம்மு-காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார்.
புல்வாமா தாக்குதலையடுத்து, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நுழைந்து தீவிரவாத பயிற்சி முகாமை குண்டுவீசி தாக்குதல் நடத்தி அழித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை பகுதியில் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையடுத்து, எல்லையோர மாநிலங்களில் கண்காணிப்பை பலப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கவும் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படைக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில் பதற்றமான சூழ்நிலை நிலவும் எல்லைப் பகுதியை பார்வையிட பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இதனிடையே இன்று பிற்பகல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முப்படைத் தளபதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தவுள்ளார்.