திருச்சியில் ராணுவ தளவாட தொழிற்சாலை உட்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
பாதுகாப்புத் துறைக்கு தேவையான தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தில் ராணுவ தொழிலக உற்பத்தி வழித்தடம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் சிறு குறு நிறுவனங்கள் பயன்பெறும் விதமாக திருச்சியில் ராணுவ தளவாட தொழிற்சாலை உட்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.