தமிழ்நாட்டு உரிமைகளின் பாதுகாவலர் "எடப்பாடி பழனிசாமி"

கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அரசியல் சார்பற்ற நடுநிலையாளர்களின் ஆதரவு பெருகியுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மாநிலங்களுக்கான திட்டங்களைப் பெற்றாலும் ஒருபோதும் மாநிலத்திற்கான உரிமைகளை அவர் விட்டுக் கொடுத்தது இல்லை … அதற்கான சான்றுகளை இப்போது பார்ப்போம்..

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்த போது 2018-ம் ஆண்டு 32 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கி ஆணையம் அமைப்பதில் வெற்றி பெற்றார். மாநிலங்களுக்கு அணைகளின் மீதுள்ள உரிமையை பாதிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவை மிகக் கடுமையாக எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அதனை தடுத்து நிறுத்தினார். இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் உத்தரவை நிறைவேற்ற மறுத்து விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் ஒரே ஒரு தமிழ் முஸ்லீம் பாதிக்கப்பட்டால் அவருக்கு முன்னால் நான் நிற்பேன் என உறுதிபட தெரிவித்தார். சமூகநீதிக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றாத மாநிலம் தமிழகம் மட்டுமே.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மிகத் தெளிவாக, மூடியது மூடியது தான், உச்சநீதிமன்றத்தில் வாதிட்டாலும் திறக்க முடியாது என்பதனை அதன் நிர்வாகத்திற்கு உணர்த்தினார். மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு படி நடக்கும் என்ற அறிவிப்பை மாற்றி பழைய மக்கள் தொகை கணக்கெடுப்பு படியே நடக்கும் என அறிவிக்க வைத்தார்

இந்த பட்டியல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்று கேட்கின்றனர் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்..

 

 

Exit mobile version