இந்தியாவையே வியக்க வைத்த தீபிகா படுகோனே

டெல்லியில் கடந்த 2005ம் ஆண்டு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர் லக்ஷ்மி அகர்வால். இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் திரைப்படமாக வெளிவரவுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாற்றை சபாக் என்ற பெயரில் இந்தியில் படமாக எடுக்கிறார்கள். இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் லக்ஷ்மியாக நடிக்கிறார் நடிகை தீபிகா படுகோனே. சபாக் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.

அந்த போஸ்டரில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட முகத்தோற்றத்தில் நடிகை தீபிகா படுகோனே இருப்பது போன்று உள்ளது. இந்த போஸ்டர் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இத்தகைய கதாப்பாத்திரத்தில் நடிக்க மிகுந்த துணிச்சல் வேண்டும் என பல திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்தப் படத்தை தீபிகா படுகோனேவே தயாரித்துள்ளார் . ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்க்கைக்கு முன்னுதாரணமாக விளங்கும் லக்ஷ்மி அகர்வால் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version