நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 27ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சிவகாசி பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செயல்பட்டு வரும், ஆயிரத்து 70 பட்டாசு ஆலைகளில், இறுதிகட்ட பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில், 3 மாதங்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு இருந்ததால், 60% உற்பத்தி குறைந்துள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் கூலி உயர்வு போன்றவற்றால், 10 சதவீதம் வரை பட்டாசு விலை உயர்ந்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆயத பூஜை பண்டிக்கை முடிந்த பிறகு, மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு, பட்டாசுகள் அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்படும் எனவும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.