தீபாவளி பண்டிகைக்காக தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை, அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை என பெருமிதம் – சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

தீபாவளியையொட்டி பொதுமக்கள் கூடிய இடங்களில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவிலையென சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு உற்சாகத்துடான் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எந்த வித சிரமமும் இன்றி பண்இகையை கொண்டாடுவதற்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. குறிப்பாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் சென்னையில் தீபாவளியை ஒட்டி தி.நகர்,புரசைவாக்கம் போன்ற இடங்களில் பொருட்களை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடினர். இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்புக்காக 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.இதனால் அசம்பாவிதங்கள் பெருமளவு தடுக்கப்பட்டன.

இதனிடையே சென்னை கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், தி.நகர் பனகல் பூங்கா, மெரினா கடற்கரை மற்றும் பூக்கடை காவல் நிலையம் ஆகிய இடங்களில் இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுடன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தீபாவளியை பண்டிகையை கொண்டாடினார்.காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்களில் எந்த வித குற்றசம்பவங்களும் நடைபெறவில்லை என்றார்.

 

Exit mobile version