நெல்லையப்பர் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற லட்சத் தீப திருவிழா

நெல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் நடைபெற்ற லட்சத்தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் தீப ஒளியில் ஜொலித்தது.

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரச்சித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை அமாவாசை அன்று லட்சத்தீபத் திருவிழா கொண்டாடப்படுகின்றது.

அந்த வகையில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு, கடந்த 14-ம் தேதி யாகசாலை பூஜையுடன் லட்சத்தீபத் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களாக அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன.

இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான லட்சத்தீபத் திருவிழா தை அமாவாசையை ஒட்டி நேற்று நடைபெற்றது. இதில் கோயில் வளாகத்தின் உள் சன்னிதி மற்றும் வெளி பிரகாரங்களில் லட்சக்கணக்கில் தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டது.

முதன்முறையாக பிரமிக்கத்தக்கவகையில் சுழலும் இராட்டினத்தில் தீப விளக்குகள், கூண்டு போல் சுழன்று எரியும்  தீப விளக்குகள், கோள வடிவ தீபங்கள் என பல வடிவங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version