73ம் ஆண்டு சுதந்திர தினவிழா நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் என்பவர் வித்தியாசமான முறையில், சுதந்திர தினத்தை கொண்டாடினார். கடல் வளத்தை பாதுகாக்கவும், கடல் மாசடைவதை தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடலுக்கு அடியில், தேசிய கொடியை நட்டு வைத்து வணக்கம் செலுத்திய அவர், கொடியை ஏந்திய படி நீந்தி சென்றார். ஆழ்கடல் பகுதியில் தேசிய கொடியை ஏந்தியவாறு மீன்களுடன் அவர் நீந்தியது காண்போரை பிரமிக்க வைத்தது.
Discussion about this post