தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளி மாநிலத்தவர் 13 பேர் உள்பட 30 ஆயிரத்து 621 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக 30 ஆயிரத்தை தாண்டி உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஐந்தில் ஒரு சதவிகிதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடையபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 83 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதே போல், கொரோனா தொற்று பாதிப்பைவிட குணமடையவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களாக குறைந்துக் கொண்டே வருகிறது. கடந்த 10ம் தேதி 20 ஆயிரத்து 904 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கடந்த மூன்று நாட்களாக 19 ஆயிரமாக குறைந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 297 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.