போதிய மழை இல்லாததால் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு குறைந்தது

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில், நீர்வரத்து வினாடிக்கு ஆயிரத்து 900 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்துள்ளதால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஆயிரத்து 900 கன அடியாக குறைந்துள்ளது.நீர்வரத்து குறைந்த போதிலும், அருவியில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க முடியாத நிலை  ஏற்பட்டுதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க விதிக்கப்படிருந்த தடை 150வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 75 அடியாக குறைந்துள்ளது. தற்போது அணையின் நீர் மட்டம் 116.52 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 88.9 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Exit mobile version