திருப்பதியில் காற்று மாசடைவதை தவிர்க்க பேட்டரி கார்கள் இயக்க முடிவு

திருப்பதியில் காற்று மாசுபடுவதை தடுக்கும் விதமாக பேட்டரி வாகனங்களை பயன்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் பேருந்து, டாக்ஸி என ஆயிரக்கணக்கான வாகனங்களில் தினமும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்கி வருகிறது. இதனால் டெல்லி , ஹைதராபாத், பெருநகரங்களை விட திருப்பதி திருமலையில் அதிகளவில் காற்று மாசு அடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து டாக்ஸிகள் அனைத்தையும் படிப்படியாக பேட்டரி வாகனங்களாக மாற்ற அரசிற்கு மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பதி மாநகராட்சி சார்பில் 15 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு அதில் மூன்று வாகனங்கள் சோதனை முறையில் திருப்பதி மலைப்பாதையில் இயக்கப்படுகிறது.

Exit mobile version