ஆர்பிட்டரின் சுற்றுவட்டப்பாதையை 50 கிலோ மீட்டராக குறைக்க முடிவு

நிலைவை சுற்றி வரும் ஆர்பிட்டரின் சுற்றுவட்டப்பாதையை 50 கிலோ மீட்டராக குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. அதில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் தற்போது 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலவை சுற்றி வருகிறது. ஆர்பிட்டரில் இருந்து பிரித்து நிலவில் தரையிரக்க முயன்ற விக்ரன் லேண்டர் நிலவின் தரைபகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் உயரத்தில் தகவல் தொடர்பை இழந்தது.

இதையடுத்து, விக்ரன் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்து மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிலைவை சுற்றி வரும் ஆர்பிட்டரின் சுற்றுவட்டப்பாதையை 50 கிலோ மீட்டராக குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்பிட்டரின் சுற்றுவட்ட பாதையை குறைத்தால் லேண்டரின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. 

Exit mobile version