ஓட்டுநர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி சட்டத்தை தளர்த்த மத்திய அரசு முடிவு

ஓட்டுநர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி தேவை என்ற சட்டத்தை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச கல்வி தகுதியாக தற்போது 8ம் வகுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை தளர்த்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. பொருளாதார ரீதியில் பின் தங்கிய திறமையான மக்கள் இதன் மூலம் பயனடையவர் . மேலும், போக்குவரத்து துறையில் 22 லட்சம் ஓட்டுநர் தேவை உள்ள நிலையில், அதனை இந்த நடவடிக்கை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவீன சூழலுக்கு ஏற்ப ஓட்டுநர் பயிற்சி வழங்கி திறன் மேம்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Exit mobile version