நிபுணர் குழு பரிந்துரையின் பேரில் புதிய கல்விக் கொள்கை குறித்து முடிவு – அமைச்சர் செங்கோட்டையன்

நிபுணர் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆராய விரைவில் நிபுணர் குழு அமைக்கப்படும் என்றார். நிபுணர் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பார் என்றும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஐ-டெக் லேப் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். செல்போனில் இருந்து பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதியும் மாணவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார்.

Exit mobile version