பிற மொழிகளில் உள்ள ஊர்ப்பெயர்களை தமிழில் மாற்ற முடிவு – அமைச்சர் பாண்டியராஜன்

தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள ஊர்கள் மற்றும் சாலைப் பெயர்கள் விரைவில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் உள்ள பெயர்களை தமிழில் மொழி மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி 3 ஆயிரம் பெயர்கள், மாவட்ட நிர்வாகங்களின் பரிந்துரையின் பேரில் தமிழில் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளன. வேதாரண்யம் மறைமலை என்றும் சீர்காழி,காழியூர் என்றும் சிதம்பரம்,தில்லை என்றும் ஸ்ரீரங்கம்,திருவரங்கம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல ட்ருப்பிலிகேன் இனி திருவல்லிக்கேணி எனவும் டூடிகொரின் இனி தூத்துக்குடி எனவும் அழைக்கப்படும்.இதற்கான அரசாணை இன்னும் இரண்டு வாரங்களில் பிறப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் பாண்டிய ராஜன் தெரிவித்துள்ளார்.

 

 

Exit mobile version