அமெரிக்காவின் “மாடர்னா” தடுப்பூசி இறக்குமதிக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம், தாம் தயாரித்த தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனுமதி கேட்டு விண்ணப்பத்துள்ளது.
இந்நிலையில், தற்போது, “மாடர்னா” தடுப்பூசியை சிப்லா நிறுவனம் இறக்குமதி செய்ய, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“மாடர்னா” தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், 18 வயதுக்கு மேல் உள்ள 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தி மத்திய அரசு பரிசோதிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.