சென்னை மணலி புதூரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது.
லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு, பலர் உயிரிழந்தனர். விசாரனையில், அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த கிடங்கில், உரிய பாதுகாப்பு பின்பற்றப்படாததால் தான் விபத்து நேரிட்டது தெரியவந்தது. சென்னையை அடுத்த மணலி புதுநகரில் சுங்கத்துறைக்கு சொந்தமான இடத்தில் 37 கண்டெய்னர்களில் சுமார் 690 டன் அமோனியம் நைட்ரேட் தாது இருப்பது வைரலாக பரவியது. மொத்தமுள்ள அமோனியம் நைட்ரேட் தாதுவை அப்புறப்படுத்த சுங்கத்துறை அதிகாரிகள், மின்னனு முறையில் ஏலத்தில் விட்டனர். அதன்படி ஹைதராபாத் நிறுவனம் ஒன்று சென்னையில் உள்ள மொத்த அமோனியம் நைட்ரேட் தாதுவையும் வாங்கியதன் அடிப்படையில், முதற்கட்டமாக 10 கண்டெய்னர் அமோனியத்தை கொண்டு செல்லும் பணி துவங்கியது.