தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில், வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உட்பட 10 மாவட்டங்களை தவிர, உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதனையடுத்து, தேர்தல் நடைபெறும் நாட்களில் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் நடைபெறும் நாட்களான வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில், 27 மாவட்டங்களுக்கு மட்டும் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.