தமிழக சட்டப்பேரவையில் இன்று, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணி ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையில், 2020-21ம் ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறைகளின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவாதத்தில் பங்கேற்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.