சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம்

சட்டப்பேரவையில், இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்துவார்கள். அதை தொடர்ந்து காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலளித்து துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

Exit mobile version