"நீட் விவகாரத்தில் புதிய சட்டம் இயற்றப்படும் என்பது மக்களை ஏமாற்றும் செயல்"

நீட் தேர்வை ரத்து செய்ய புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று, முழுக்க முழுக்க மாணவர்களை ஏமாற்றும் அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளதாக, அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டத்தை இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என, சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்கக் குறிப்பில், திமுக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நியூஸ் ஜெ. தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இன்பதுரை, கல்வி, மத்திய அரசின் இனக்கப் பட்டியலில் இருக்கும்போது, மத்திய அரசின் சட்டம் அமலில் இருக்கும் போது, மாநில அரசு சட்ட இயற்றினால், அது செல்லாது என்று தெரிவித்தார்.

மேலும், திமுக எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் அல்லது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளார்.

 

 

Exit mobile version