ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டுவீச்சு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்வு

ஜம்முவில் கையெறி குண்டுவீச்சில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் குளிர்கால தலைநகரான ஜம்முவில் இயங்கிவரும் பேருந்து நிலையத்தில் நேற்று மர்மநபர் ஒருவர் கையெறி குண்டை வீசியதில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் 33 பேர் அதில் சிக்கி படுகாயமடைந்தனர். மேலும் பேருந்து ஒன்று முற்றிலும் சேதமடைந்தது.

குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்து அங்குவந்த மீட்புக்குழுவினர், காயத்துடன் போராடிக் கொண்டிருந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த குண்டுவெடிப்பில் முகமது ஷாரிக் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் குண்டுவெடிப்பில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதலில் ஈடுபட்ட யாசிர் அகமது என்பரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version