பஹாமாஸ் நாட்டில் டோரியன் சூறாவளி கோர தாண்டவமாடியதில் உயிர்பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
பஹாமஸ் நாட்டில் கடந்த ஒரு வார காலமாக டோரியன் சூறாவளி காற்று வீசி வருகிறது. 13 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தால் மாயமான நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சூறாவளி காற்றில் சிக்கி அபாகாஸ் தீவில் 35 பேரும், கிராண்ட் பகாமா தீவில் 8 பேர் என மொத்தம் 43 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்பலிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் ஹூபெர்ட் மின்னிஸ் தெரிவித்துள்ளார்.