Ice Bucket Challenge-ஐ அறிமுகப்படுத்தியவர் மரணம்

கடந்த 2014-ம் ஆண்டு உலகெங்கிலும் வைரலான Ice Bucket Challenge-ஐ அறிமுகப்படுத்தியவர் தனது 34வது வயதில் மரணமடைந்தார்.

ஐஸ் கட்டிகள் நிறைந்த தண்ணீர் வாளியை தங்கள் மீது ஊற்றிக்கொண்டு மற்றவர்களை சவாலுக்கு அழைக்கும் Ice Bucket Challenge கடந்த 2014ம் ஆண்டு அறிமுகமானது. நரம்பு சார்ந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டு வரப்பட்ட இந்த சவாலை உலகம் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை செய்து அசத்தினர். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மற்றவர்களையும் செய்ய தூண்டினர். ALS என்னும் அந்த நரம்பு சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சவால் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலர்கள் நிதியாகக் கிடைத்தது.

இந்நிலையில் Ice Bucket Challenge-ஐ அறிமுகப்படுத்திய ALS நோயால் பாதிக்கப்பட்ட பீட் ஃப்ரேட்ஸ் இன்று தனது 34வது வயதில் மரணமடைந்தார். அவரது மரணம் உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version