எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் 3 மாணவர்களின் மரணம் – சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்

சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் 3பேரின் மர்ம மரணங்கள் குறித்து சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.மல்லிகா தலைமையில் விசாரணை தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் காவல்நிலையத்திற்குட்பட்ட எஸ்.ஆர்.எம். கல்லூரியில் தங்கிப் பயின்று வந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, அனுப்பிரியா என்ற மாணவி கடந்த மே மாதம் 5ஆம் தேதி 10வது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

அடுத்த 2 நாட்களில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனித் சவுத்ரி என்ற மாணவர் விடுதியின் பின்புறம் இறந்து கிடந்தார். பின்னர் ஜூலை 15ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தர்சன் என்ற மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த 3 மாணவர்களின் மரணம் குறித்த விசாரணையை மத்தியக் குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு மாற்றிக் காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். இந்நிலையில் சிபிசிஐடி எஸ்பி மல்லிகா இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

Exit mobile version