பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளராக இருந்த எஸ்.ஆர்.சரவணபெருமாளின் இரண்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணி இழுத்து கொண்டிருக்கும் இழுபறியான அணியாக உள்ளதாக விமர்சித்தார்.
வரும் மக்களவை தேர்தலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் மோடி கொண்டு வந்த உலக அளவிலான திட்டங்களை மக்களிடம் முன்னெடுத்து சென்று வாக்கு சேகரிக்க உள்ளதாக மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.