உயிரிழந்த சிறுவன் சுஜித் குடும்பத்தினரிடம் ரூ.10 லட்சம் காசோலை வழங்கப்பட்டது

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்சமும், அதிமுக கட்சி சார்பில் 10 லட்சம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று நடுகாட்டுப்பட்டிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சிவராசு முதல்வர் பொது நிவாரண நிதிக்கான 10 லட்சம் ரூபாய்கான காசோலையை வழங்கினார்.

Exit mobile version