பகல் -இரவு டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் அசத்தலான பந்துவீச்சில் சுருண்ட வங்கதேசம் அணி

கொல்கத்தாவில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க பகல் -இரவு டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் அபார பந்துவீச்சில் வங்கதேச அணி 106 ரன்களில் சுருண்டது.

இந்தியா வங்கதேச அணிகள் மோதும் பகல்-இரவு கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற வங்க தேச அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக இஸ்லாம் மற்றும் காயஸ் களமிறங்கினர். காயஸ் 4 ரன்கள் எடுத்திருந்த போது, இஷாந்த் ஷர்மா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்து களமிறங்கிய மொமினுல், மிதுன், ரஹிம் ஆகிய மூவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வங்கதேச ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். துவக்க ஆட்டக்காரர் இஸ்லாம் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து களமிறங்கிய மகமுதுல்லா 6 ரன்களில் ஆட்டமிழக்க, வங்கதேச அணி ரன் சேர்க்க முடியாமல் திணறி வருகிறது. சற்று நிதானமாக ஆடிய லிட்டன் தாஸ் 24 ரன்கள் எடுத்திருந்த போது, காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். இதை அடுத்து இஷாந்த் ஷர்மா வீசிய பந்தில் ஹசன் 19 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 106 ரன்களில் வங்க தேச அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் நிதானமாக ஆடி வருகின்றனர். தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், ரோகித் ஷர்மாவும் களமிறங்கினர்.11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடி வருகிறது

இந்நிலையில்  இந்த டெஸ்ட் போட்டியை நேரில் காண வங்தேச பிரதமர் ஷேக் ஹசினா, பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் ஈடன் கார்டன் விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்தனர்.

Exit mobile version