அனைவரையும் மதிப்போம் ; வன்முறையை தடுப்போம் – பாலியல் தொழிலாளர்கள் மீதான வன்முறை தடுப்பு தினம்

டிசம்பர் 17-ம் நாள் சர்வதேச பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினமாக, ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. இந்தநாள் உருவாக்கப்பட்டதற்கான காரணம் பற்றியும், விழிப்புணர்வு பெற வேண்டிய கட்டாயம் அனைவரிடமும் உள்ளது.

கடந்த1980 முதல்1990க்கும் இடைப்பட்ட காலங்களில் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஏறத்தாழ 71 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்த இந்த சம்பவத்தின் தாக்கத்தால், பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் விதமாகவும், இது குறித்த விழிப்புணர்வு உலக மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் சர்வதேச பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

2001 இல் இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள், தங்கள் உரிமைகளுக்கான அடையாளமாக சிகப்பு நிற குடையை பயன்படுத்தினர். 2005ல் ஐரோப்பாவில் ஐ.சி.ஆர்.எஸ்.இ எனப்படும் பாலியல் தொழிலாளர்கள் உரிமைகள் தொடர்பான சர்வதேச குழு, சிவப்பு குடையை ஏற்றுக்கொண்டது.

பாலியல் தொழில் புரிவதனால், அவர்களுடைய குழந்தைகள் மற்றும் குடும்பம் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். சர்வதேச மக்கள் அனைவரும், நம் போன்ற இதர பாலினத்தவர்கள் பற்றிய புரிதலை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமில்லாமல் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் அதில் இருந்து விடுபட எண்ணி, உழைத்து முன்னேற முயற்சி செய்பவர்களுக்கு நாம் அனைவரும் உதவிக் கரம் நீட்டுவோம்.

Exit mobile version