அன்பளிப்பாக வந்த ரூ.25,000 இளைஞருக்கு கொடுத்து உதவிய முடித்திருத்தும் தொழிலாளியின் மகள்!

பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற மதுரையை சேர்ந்த முடித்திருத்தும் தொழிலாளியின் மகள் நேத்ரா, தனக்கு அன்பளிப்பாக வந்த 25 ஆயிரம் ரூபாயை, இரண்டு கால்களும் செயலிழந்த இளைஞருக்கு வழங்கினார். ஊரடங்கால் தவித்த மக்களுக்காக, மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி மோகன், தனது மகளின் உயர் படிப்புக்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை செலவளித்து, ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மனதின் குரல் நிகழ்ச்சியில் இதுகுறித்துப் பேசிய பிரதமர் மோடி, மோகன் மற்றும் அவரது குடும்பத்தினரை பாராட்டியிருந்தார். இந்நிலையில், மோகனின் மகள் நேத்ராவின் படிப்பு செலவினை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த டி.பி.நோயால் இரு கால்களும் செயலிழந்த முருகேசன் என்ற இளைஞர், தனக்கு உதவுமாறு மோகனுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அறிந்த மோகனின் மகள் நேத்ரா தனக்கு அன்பளிப்பாக கிடைத்த 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும், ஒரு மாதத்திற்கான மளிகைப் பொருட்களையும், முருகேசனுக்கு வழங்கினார்.

Exit mobile version