போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கான தேதி ஒத்திவைப்பு

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையை அடுத்த குலமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்டு தோறும் பிப்ரவரி 3-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு மத்திய அரசின் தடுப்பு மருந்து தொழில்நுட்ப குழு இதுவரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கான தேதியை அறிவிக்காததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Exit mobile version