6 மணிக்கு வெளியாகிறது “தர்பார்” பட அப்டேட்

பேட்ட படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

2020ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக தர்பார் வெளியாக இருப்பதால் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது படப்பிடிப்பிலுள்ள புகைப்படங்கள் படக்குழுவுக்கே தெரியாமல் வெளியாகி படத்தை பற்றிய எதிர்பார்ப்பை தூண்டின.

இந்நிலையில் தர்பார் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக படத்தின் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் #Darbar என்கிற ஹேஸ்டேக்கை ரஜினி ரசிகர்கள்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி உள்ளனர்.

Exit mobile version