நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் தற்போது வெளியாகி உள்ளது. தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எப்போதும் ரஜினி படத்திற்கு இருப்பது போல இந்த படத்திற்கும் பெரிய அளவில் ஓப்பனிங் இருந்தது. பொங்கலை முன்னிட்டு படம் வெளியாகி இருப்பதால், படத்திற்கு பெரிய அளவில் வசூல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் வந்திருக்கும் மற்றுமொரு போலீஸ் படம். திரைக்கதை சுவாரஸ்யமாக இல்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றிய போது, மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டவரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனன், தற்போது, ரஜினியின் தர்பார் படம் குறித்து டுவிட்டரில் தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
அதில் , ஐயா, டேய் தமிழ் இயக்குனர்களா… இனிமே இந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா. உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது, என்று குறிப்பிட்டுள்ளார்.
தர்பார் படம் விமர்சன ரீதியாக நிறைய மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரஜினி ரசிகர்கள் மட்டும் படத்தை புகழ்ந்து வருகிறார்கள்.