பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா..

ஏ .ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்துள்ள படம் தான் தர்பார்.சந்திரமுகி படத்திற்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளதால், ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது உள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த படம் 2020 பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தை அனிருத் இசையில் லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. மேலும் ,இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நாளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ஜவர்கலால் நேரு விளையாட்டு அரங்கத்தில் ,டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பினால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.விரைவில் ரஜினிகாந்தின் 168 வது படத்தைப் பற்றிய அப்டேட் களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Exit mobile version