அபாயகரமான கதிரியக்க கேப்ஸ்யூல் பத்திரமாக மீட்கப்பட்டது!

ஆஸ்திரேலியாவில், சுரங்கம் அமைத்து கனிம வளங்களை எடுக்கும் ரியோ டின்டோ நிறுவனம் சமீபத்தில், ‘டென்சிட்டி காஜ்’ என்னும் இயந்திரத்தை, கிம்பர்லி பகுதியிலுள்ள சுரங்கத்துக்கு எடுத்துச் சென்றது. அப்போது, வழியில் சிறிய அளவிலான அந்த கதிரியக்க கேப்சூல் மாயமாகி இருக்கிறது. இது தோல் வியாதி, தீக்காயம் போன்ற அபாயகரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், அவசர நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதே நேரத்தில், அந்த கதிரியக்க கேப்ஸ்யூலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அந்த இயந்திரம் பயணித்த 1,400 கிலோ மீட்டர் தூரத்தையும் டிடெக்டர் உதவியுடன் தேடி வந்தனர். இந்நிலையில் நியூமேன் பகுதியில் அந்த கேப்ஸ்யூல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Exit mobile version