ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்-இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

பிரிஸ்பேனில் இன்று தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது களமிறங்கிய நிலையில், அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

ரோரி பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர் டேவிட் மாலன் 6 ரன்களுக்கும், கேப்டன் ஜோ ரூட் டக் அவுட் ஆகியும் அதிர்ச்சி அளித்தனர்.

பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ், 5 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 147 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்களும், போப் 35 ரன்களும் எடுத்தனர்.

Exit mobile version