கொடைக்கானல் பேத்துப்பாறை பெரியாற்றில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மக்கள் தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வெள்ளி, புலிச்சோலை அருவிகள் மற்றும் விலப்ட்டி, பெலாக்கெவை ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் பேத்துப்பாறை பெரியாற்றில் கலப்பதால், மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுகிறது. இதனால், அக்கரையில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள், கனமழைக்கு பின்னர் இக்கரைக்கு கயிறு கட்டி, ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.