ஆண்டு விழாவில் அனைவரையும் கவர்ந்த மாணவ மாணவிகளின் நடனம்

கோவையில், அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகள் நடத்திய நடனம் அனைவரையும் கவர்ந்தது.

கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். மாணவர்களின் நடன நிகழ்ச்சி அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது. நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மாணவ-மாணவியர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும், மாணவர்களின் நடன நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது என்றும் பாராட்டினார்.

Exit mobile version