அடடா! இது தெரியாம போச்சே! கைகளுக்காகவே தனியாக சிகிச்சைப் பிரிவு…

கைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் வகையில், கைகளுக்காகவே தனியாக சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்….

மனித உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியே சிறப்பம்சம் உண்டு. உணவு உண்ணுதல் உட்பட மனிதனின் அன்றாட தேவையை பூர்த்தி செய்வதில் கைகளின் பங்கு முக்கியமானதாக உள்ளது. அத்தகைய கைகளை பராமரிப்பது முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனி சிகிச்சைப் பிரிவுகள் உள்ள நிலையில், கைகளுக்கும் தனியாக சிகிச்சைப் பிரிவு தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. உடலில் அதிக இயக்கங்களையும், பணிகளையும் செய்ய உதவும் கைகளுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் கை சிகிச்சைப் பிரிவுக்கு செல்லவேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். விரல் நுணியில் இருந்து கை மூட்டு வரை ஏற்படக்கூடிய காயங்கள், வெட்டுக்காயங்கள், எலும்பு முறிவுகள், கை மூட்டு பாதிப்பு, பிறவி கை ஒழுங்கின்மை, நரம்பு தளர்ச்சிகள் போன்ற எவ்வித பிரச்சினைகளுக்கும் எளிதாக சிகிச்சை அளிக்கமுடியும் என கை அறுவை சிகிச்சை நிபுணர் தெரிவிக்கிறார்.

விபத்துகளின்போது, எதிர்பாராதவிதமாக கைவிரல் அல்லது கை துண்டானால், அடுத்த ஆறு மணி நேரத்துக்குள் கை அறுவை சிகிச்சை பிரிவுக்கு வந்தால் 100 சதவீதம் குணப்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதயம், நுரையீரல், கண், பல் மருத்துவத்துக்கு தனி மருத்துவப் பிரிவுகள் செயல்படுவதைப் போன்று, கைகளுக்கென்று தனி சிகிச்சை பிரிவு ஸ்டான்லி, சி.எம்.சி., மருத்துவமனையை தொடர்ந்து தற்போது போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இயங்கி வருகிறது.

Exit mobile version