தனியார் துறைமுகத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு

காரைக்காலில் செயல்பட்டு வரும் தனியார் துறைமுகத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு உள்ளதா என்பது குறித்து மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் மார்க் குழுமத்திற்கு சொந்தமான துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி துகள்களால், சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், அங்கு ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது. இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுவினர் துறைமுகத்தையொட்டிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நாகையின் எல்லைப்பகுதிகளான நாகூர், கீழவாஞ்சூர் பகுதிகளிலும் கருவிகள் பொருத்தி ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் துறைமுகத்தில் நிலக்கரி கையாளும் முறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Exit mobile version