குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கும்படி 28 பேருக்கு உத்தரபிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பொதுச் சொத்தை சேதப்படுத்தியவர்களைக் கண்டறிந்து, அவர்களின் சொத்துக்கள் ஏலத்தில் விடப்பட்டு அதில் கிடைக்கும் பணம் அரசின் கருவூலத்தில் சேர்க்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி முசாபர் நகரில் 60 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கலவரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதற்காக 14 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி 28 பேருக்கு உத்தரபிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.