தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பெரும் சேதம்

தர்மபுரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மாதேமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக வெங்கடப்பட்டி, குட்டூர், ஆவரங்காடு, கோடியூர் ஊள்ளிட்ட பகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் விழுந்தும், தென்னை மரங்கள் சாய்ந்தும், மின் கம்பிகள் அருந்தும் சேதமடைந்தன. இதனால் அங்கு மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இதுகுறித்து வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Exit mobile version