அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறையில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 97 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு காத்திருந்த குருவை நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்க்கி இருக்கின்றன. தமிழக அரசு இந்த ஆண்டிற்கான காப்பீட்டு

தொகையை அறிவிக்காததால் அறுவடைக்கான கடைசி நாள் எட்டிய நிலையில் விவசாயிகள் காப்பீடு செய்ய முடியவில்லை. இதன் காரணமாக மழைநீரில் மூழ்கிய பயிருக்கு இழப்பீடும் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், போதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணத்தால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version