நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையினால் ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
கூடலூரை அடுத்த பந்தலூர், தொரப்பள்ளி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் வாழை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்தப் பகுதியில் நடப்பு பருவத்தில் பயிரிடப்பட்ட வாழை, விளைச்சல் முடிந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் கடந்த புதனன்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக வாழை மரங்கள் முற்றிலும் சாய்ந்தன. இதனால் தங்களுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டமடைந்திருப்பதாகத் தெரிவிக்கும் விவசாயிகள் தமிழக அரசு உதவ கோரிக்கை வைத்துள்ளனர்