மேகேதாட்டு அணையால், கர்நாடகாவைவிட தமிழகத்திற்குதான் அதிக பலன் கிடைக்கும் என்றும், இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு தர, தமிழக மக்களையும், முதலமைச்சரையும் வேண்டுவதாக, கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதை தெரிவித்துள்ளார். மேகேதாட்டு திட்டம் தமிழகத்திற்கு பயனளிக்கும் என்றும், தமிழக அரசு விரும்பினால், அணை கட்டும் பகுதியை நேரடியாக பார்வையிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.